/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் மோதிய பைக் தனியார் ஊழியர் பலி
/
பஸ்சில் மோதிய பைக் தனியார் ஊழியர் பலி
ADDED : ஆக 29, 2024 12:15 AM

ராயபுரம், '
மண்ணடி, வெங்கய்யர் தெருவைச் சேர்ந்தவர் அசாருதீன், 29; தண்டையார்பேட்டை ேஹாண்டா ேஷாரூம் ஊழியர்.
இவர், காசிமேடு, எஸ்.என்.செட்டி தெரு வழியாக நேற்று காலை தன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். அவ்வழியாக, பிராட்வேயில் இருந்து எண்ணுார் நோக்கி செல்லும் தடம் எண்: 4 மாநகர பேருந்து வந்தது. எஸ்.என்.செட்டி தெருவில் எடைமேடை அருகே வந்தபோது, அசாருதீனின் பைக், பேருந்தின் இடதுபுறம் இடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அசாருதீன் மீது, பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ராயபுரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாநகர பேருந்து ஓட்டுனரான, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த குமாரதாஸ், 40, என்பவரை தேடி வருகின்றனர்.