ADDED : ஆக 31, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, பெரவள்ளூர், மூன்றாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் பாலாஜி, 37; தனியார் வங்கி மேலாளர்.
இவர், தன் 'ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்' மற்றும் 'மாருதி ஸ்விப்ட்' காரை, வீட்டில் நிறுத்தியிருந்தார்.
இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சையது ரஹமதுல்லா, 33, என்பவர், 'யமஹா எப்.இசட்' பைக் மற்றும் மாருதி சுசுகி காரை, வீட்டில் நிறுத்தியிருந்தார்.
நேற்று நள்ளிரவு, மேற்கூறிய இரு பைக்குகள் மற்றும் கார்கள், திடீரென தீப்பிடித்து எரிந்தன.
சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் மற்றும் கொளத்துார் தீயணைப்பு துறையினர், அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள், பைக்குகள் தீக்கிரையாகின. கார்களும் லேசாக எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து, திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.