/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுநீர்ப்பை புற்றுநோய் ஓவிய காட்சியாக விழிப்புணர்வு
/
சிறுநீர்ப்பை புற்றுநோய் ஓவிய காட்சியாக விழிப்புணர்வு
சிறுநீர்ப்பை புற்றுநோய் ஓவிய காட்சியாக விழிப்புணர்வு
சிறுநீர்ப்பை புற்றுநோய் ஓவிய காட்சியாக விழிப்புணர்வு
ADDED : மே 31, 2024 12:13 AM

சென்னைசென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், சிறுநீர்ப்பையில் ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'மெர்க் ஸ்பெஷாலிட்டி பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துடன் இணைந்து, ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவமனையின் இணை இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
சிறுநீர்ப்பையில் உருவாகும் புற்றுநோயை கண்டறிய, 'யூரினரி ப்ளோரசன்ட் ப்ளோ சைட்டோமெட்ரி' என்ற நவீன தொழில்நுட்ப கருவி உள்ளது.
இந்த கருவி, சிறுநீர்ப்பையில் உள்ள புற்றுநோய் செல்களை மிக துல்லியமாக கண்டறியும். இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்தை காவேரி மருத்துவமனையும் கொண்டுள்ளது. இப்புற்றுநோய் ஒரு லட்சம் பேரில், 4 பேர் வரை பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், 11,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். இப்புற்றுநோய் பாதிப்புக்கு புகைப்பிடித்தல், மரபணு உள்ளிட்ட காரணங்கள் ஏற்படுகின்றன.
இந்நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. எனவே, ஓவிய கண்காட்சி வாயிலாக சிறுநீர்ப்பை புற்றுநோய் குறித்து, காவேரி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மக்களுக்கு பயனளிக்கும். சிறுநீர்ப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் வாயிலாக குணப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குனர் ஏ.என்.வைத்தீஸ்வரன், ஓவியர் 'டிராட்ஸ்கி' மருது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.