/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிளேஸ்' வாலிபால் லீக் சேது பாஸ்கரா வெற்றி விளையாட்டு செய்திகள்
/
'பிளேஸ்' வாலிபால் லீக் சேது பாஸ்கரா வெற்றி விளையாட்டு செய்திகள்
'பிளேஸ்' வாலிபால் லீக் சேது பாஸ்கரா வெற்றி விளையாட்டு செய்திகள்
'பிளேஸ்' வாலிபால் லீக் சேது பாஸ்கரா வெற்றி விளையாட்டு செய்திகள்
ADDED : ஆக 25, 2024 12:23 AM

சென்னை, தமிழகத்தில் முதல் முறையாக, 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னையில் பல்வேறு பள்ளிகளில் நடக்கின்றன.
இந்த சீசனில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், மான்போர்ட்டு, டான்பாஸ்கோ, ஏ.ஜே.எஸ்., - கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., - சேது பாஸ்கரா, செயின்ட் பீட்டர்ஸ் என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. 'லீக்' முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பள்ளிகளில், போட்டிகள் நடக்கின்றன.
நேற்று முன்தினம், அம்பத்துாரில் உள்ள சேது பாஸ்கரா பள்ளி வளாகத்தில், பத்தாவது லீக் போட்டி நடந்தது.
அதில், சேது பாஸ்கரா மற்றும் பிராட்வே செயின்ட் மேரீஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், 25 - 13, 25 - 18, 25 - 15 என்ற கணக்கில், சேது பாஸ்கரா பள்ளி அணி வெற்றி பெற்றது.