/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 20, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் உள்ளது. நேற்று மாலை, 3:00 மணியளவில், இந்த மாலுக்கு ஒரு இ-மெயில் வந்துள்ளது.
அதில், மாலில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வெடித்து, மாலில் உள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதக்கப் போகின்றனர். கே.என்.ஆர்., என்ற குழு இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு வாய்மொழி புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் புரளி என தெரிந்தது.
சம்பவம் குறித்து அண்ணாசாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

