/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூலை 20, 2024 12:55 AM
பெரும்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் குளோபல் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் கூரியரில் கடிதங்கள் வந்தன. மாலை 7:30 மணியளவில் கடிங்களை ஆய்வு செய்ததில், மேகநாதன் என்பவர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருந்தது.
அந்தக் கடிதத்தில், நேற்று நண்பகல் சரியாக 12.15 மணிக்கு மருத்துவமனை முழுதும் இடிந்து விழும் அளவிற்கு, வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டு இருந்தது.
இது குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையம் மற்றும் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைக்கு வந்து, இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
போலீசார் கடிதம் அனுப்பிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.