ADDED : ஏப் 28, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவண்ணாரப்பேட்டை:புதுவண்ணாரப்பேட்டை, அண்ணா நகர் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் சந்துரு, 40; கூலித்தொழிலாளி. இவர் நேற்று, புதுவண்ணாரப்பேட்டை, பீச் ரோடு அருகே நின்றிருந்தார்.
அப்போது, அவ்வழியே 'பைக்'கில் வந்த மூவர் கும்பல், சந்துருவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியது.
சம்பவத்தில் ஈடுபட்ட திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்த சுரேந்தர், 21, திருவொற்றியூர், சாஸ்திரி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 21, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

