/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகவரி மறந்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
முகவரி மறந்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : ஏப் 25, 2024 12:43 AM
பூந்தமல்லி, பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடி பேருந்து நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு சைக்கிள் ஓட்டி வந்த, 5 வயது சிறுவன், தன் வீடு எங்கு உள்ளது என்று தெரியாமல், அங்கும் இங்குமாக சுற்றியபடி இருந்தான். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இதை கவனித்து, சிறுவனிடம் விசாரித்தனர்.
அதில், தாத்தா வீடு என்பதை தவிர, வேறு எதையும் சிறுவனால் கூற முடியவில்லை. வீடு இருக்கும் திசை தெரியாமலும், முகவரியை கூற முடியாமலும் தவித்தான். இதையடுத்து, பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து, சிறுவனின் முகவரி குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், தன் மகனை காணவில்லை என, ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்களிடம், அந்த சிறுவனின் அடையாளங்களை கூறியபோது, தன் மகன் தான் என, அந்த தம்பதி உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, தம்பதியை பூந்தமல்லி காவல் நிலையம் வரவைத்து, சிறுவனை ஒப்படைத்தனர்.

