/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'காப்பர்' குழாய்கள் திருடிய சிறுவர்கள் கைது
/
'காப்பர்' குழாய்கள் திருடிய சிறுவர்கள் கைது
ADDED : ஆக 30, 2024 12:54 AM
சென்னை, நுங்கம்பாக்கம், கல்லுாரி சாலையிலுள்ள டி.பி.ஐ., எனும் அரசு தேர்வுகள் இயக்கம் வளாகத்தில், பயிற்சிக்கு வரும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்க, விடுதி உள்ளது.
இங்கு பொருத்தப்பட்டிருந்த, 11 'ஏசி' இயந்திரங்களில் இருந்து, 9 கிலோ எடையிலான 'காப்பர்' குழாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஜீவா, 19, தேவன், 19, வெங்கடேசன், 18, மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவர், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து நேற்று, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். சிறுவர்களை, சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். திருடப்பட்ட காப்பர் குழாயை பறிமுதல் செய்தனர்.

