ADDED : மார் 11, 2025 07:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:வேளச்சேரி, பவானி நகரில், மணி என்பவர் வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை, பக்கவாட்டு சுவர் பூச்சு வேலை நடந்தது.
இதில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கொத்தனார்கள் புஷ்பராஜ், 55, இம்மானுவேல், 45, ஆகியோர் பணி செய்து கொண்டிருந்தனர்.
கட்டடத்தை ஒட்டி உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. பணியின் போது, மின் கம்பியில் உடல் உரசியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு, 8 அடி உயரத்தில் இருந்து விழுந்தனர். இதில், புஷ்பராஜ் பலியானார். இம்மானுவேல் பலத்த காயத்துடன், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.