/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணப்பெண் சகோதரியின் நகை, பாஸ்போர்ட் மாயம்
/
மணப்பெண் சகோதரியின் நகை, பாஸ்போர்ட் மாயம்
ADDED : ஜூலை 14, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிராமி, 37. கணவருடன் சிங்கப்பூரில் வசிக்கிறார்.
இவரது தங்கையின் திருமணம், பெரம்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக, சென்னை வந்த அபிராமி, பெரம்பூரில் உள்ள ேஹாட்டலில் தங்கினார்.
பின், பெரம்பூரில் உள்ள மயூரா மண்டபத்திற்கு திருமணத்திற்கு வந்தவர், தாலி கட்டும் நேரத்தில், கைப்பையை கீழே வைத்து அர்ச்சதை துாவி வாழ்த்தினார்.
பின் கைப்பையை தேடியபோது, அது மாயமாகி இருந்தது தெரிய வந்தது. அதில் 11 சவரன் நகை, பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன.
இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.