/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
/
எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
ADDED : மே 05, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி, பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் சேகர் மனைவி கற்பகம், 50. நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணிக்கு எழுந்த கற்பகம், மகன் நவீனிடம் தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, மீண்டும் துாங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை, வீட்டின் அருகில் உள்ள குளம் அருகே, கற்பகம் தீயிட்டு எரித்த நிலையில் சடலமாக கிடந்தார்.
பொன்னேரி போலீசார் விசாரணையில், சென்னையில் பணியாற்றி வரும் மகன் நவீன், அங்கு ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், தாய் கற்பகத்தை தன்னுடன் சென்னைக்கு வரும்படியும் தெரிவித்துள்ளார். இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்த வந்த நிலையில், தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.