/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுபாட்டில் கடத்திய பஸ் ஓட்டுனர் கைது
/
மதுபாட்டில் கடத்திய பஸ் ஓட்டுனர் கைது
ADDED : ஆக 03, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில், காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீசார், நேற்று வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த 'மாருதி ஸ்விப்ட்' காரில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன.
விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தி வந்தது, காஞ்சிபுரம் கீழ்ஒட்டிவாக்கத்தைச் சேர்ந்த இம்மானுவேல், 49, என்பதும், ஓரிக்கை பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிவதும் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், கடத்தி வந்த 66 மதுபாட்டில்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.