/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சதுர அடி ரூ.4,599 விலையில் வீடு சோழிங்கநல்லுாரில் காசாகிராண்ட் அறிமுகம்
/
சதுர அடி ரூ.4,599 விலையில் வீடு சோழிங்கநல்லுாரில் காசாகிராண்ட் அறிமுகம்
சதுர அடி ரூ.4,599 விலையில் வீடு சோழிங்கநல்லுாரில் காசாகிராண்ட் அறிமுகம்
சதுர அடி ரூ.4,599 விலையில் வீடு சோழிங்கநல்லுாரில் காசாகிராண்ட் அறிமுகம்
ADDED : மே 08, 2024 12:16 AM

சென்னை, தென்மாநிலத்தில் முன்னணி கட்டுமான நிறுவனமாக, காசாகிராண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2004ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், 140க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
சென்னை, சோழிங்கநல்லுாரில் தற்போது, 30 ஏக்கர் நிலத்தில், 'காசாகிராண்ட் ஹோலா சென்னை' என்ற திட்டத்தை, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. நவீன மற்றும் சொகுசு வசதிகளுடன் இந்த குடியிருப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் 2, 3, 4 படுக்கை அறை வீடுகள், 5 படுக்கை அறை 'ப்ளோர் வில்லா' வகை வீடுகள், 4 படுக்கை அறை 'சிக்னேச்சர் வில்லா' வகை வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் மொத்தமாக, 1,818 பிரீமியம் வீடுகள் கட்டப்படுகின்றன.
இங்கு, 160க்கும் மேற்பட்ட உலக தரத்திலான நவீன வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பழைய மாமல்லபுரம்சாலையில், இன்போசிஸ் நிறுவனத்திற்கு எதிரில் அமைந்துள்ள இத்திட்ட பகுதிக்கு, அடையாறில் இருந்து, 15 நிமிடங்களிலும், பெருங்குடியில் இருந்து, 10 நிமிடங்களிலும் செல்ல முடியும்.
வேறு எங்கும் இல்லாத வகையில், 1.7 ஏக்கரில் 'கிளப் ஹவுஸ்', 23 ஏக்கர் திறந்தவெளி பரப்பு என, தனி சிறப்பு அம்சங்கள் இங்கு உள்ளன.
சோழிங்கநல்லுாரில், தற்போதைய சந்தை மதிப்பில், சதுர அடி 6,500 ரூபாய் என்ற விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படும் சூழலில், காசா கிராண்ட் ஹோலா சென்னையில், சதுர அடி 4,599 ரூபாய் விலையில் வீடுகள் வழங்கப்படுகின்றன.
பிரபல இசையமைப்பாளர் அனிருத், இத்திட்டத்தின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, காசா கிராண்ட் வர்த்தக பிரிவு மூத்த துணை தலைவர் விமேஷ் கூறியதாவது:
சோழிங்கநல்லுாரின் மையப்பகுதியில், 'கேட்டட் கம்யூனிட்டி' முறையில் இந்த குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் விசாலமான வீடுகள், உயர்தர சிறப்பு வசதிகள் என, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் வீடுகள் அமைகின்றன.
இத்திட்டத்தில் கட்டுமான பணிகள், 30 மாதங்களில் முடிக்கப்பட்டு, வீடுகள் ஒப்படைக்கப்படும். கூடுதல் விபரங்கள் அறிய, 98844 60877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

