/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வாட்ஸாப்'பில் மிரட்டல் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
/
'வாட்ஸாப்'பில் மிரட்டல் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
'வாட்ஸாப்'பில் மிரட்டல் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
'வாட்ஸாப்'பில் மிரட்டல் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஆக 03, 2024 12:18 AM
ஆயிரம் விளக்கு, பேகம் சாகிப் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கோகிலா, 39; ஆயிரம் விளக்கு வடக்கு பகுதி அ.தி.மு.க., மகளிர் அணி செயலர். இவர், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் விபரம்:
ஜூலை 27ல், 63வது வார்டு கட்சியின் மகளிர் அணி வட்டச் செயலர் வாணி, அ.தி.மு.க.,வின் இரண்டு வாட்ஸாப் குழுவிலும், என்னை மிகவும் இழிவுபடுத்தி ஆபாசமாக பேசி, பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
புகாரின்படி நேற்று, மகளிர் அணி வட்டச் செயலர் வாணி, 44, மீது வழக்குப்பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- நமது நிருபர் -