/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் கண்ணாடி உடைப்பு பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு
/
கார் கண்ணாடி உடைப்பு பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு
ADDED : செப் 13, 2024 12:28 AM
வடபழனி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகுல், 40; மருத்துவர். இவர், பணி நிமித்தமாக நேற்று முன்தினம் தன் காரில் ஓட்டுனருடன் சென்னை வந்தார்.
வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே, இரவில் காரை நிறுத்தி சென்றார். அப்போது, அங்கு தாம்பரம் - முடிச்சூர் சாலை, சாந்தி நகரைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் சக்திவேல், 38, என்பவர் மதுபோதையில் 'போர்டு எண்டேவர்' காரில் வந்தார், அவருடன் இருந்த சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் இருந்தார். சக்திவேலின் கார் உரசியதில் கோகுல் காரின் வலது பக்க கண்ணாடி உடைந்தது. இது குறித்து கேட்டபோது, கோகுல் மற்றும் ஓட்டுனரிடம் சக்திவேல் தகராறு செய்துள்ளார். ஆத்திரத்துடன், கோகுல் காரின் முன் பக்க கண்ணாடியையும் உடைத்தார். மது போதையில் வாகனம் ஓட்டியதாக, சக்திவேல் மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அபராதம் விதித்தனர்.