/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு
/
அ.தி.மு.க., பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு
ADDED : மார் 25, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:தென் சென்னை தொகுதியில் பா.ஜ.,வின் தேர்தல் அலுவலகம், வேளச்சேரியில் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி வாங்காததால், பா.ஜ.,வைச் சேர்ந்த பாபு என்பவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதேபோல், அ.தி.மு.க., சார்பில் தென் சென்னை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தன் அறிமுக கூட்டத்திற்கு, அனுமதி பெறாததால் வேட்பாளர் ஜெயவர்தன், கட்சி நிர்வாகிகள் மீது, தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், அனுமதியில்லாமல் கூட்டம் நடத்திய வடசென்னை லோக்சபா தொகுதி வேட்பாளர் பால்கனகராஜ் உள்ளிட்டடோர் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

