ADDED : ஜூலை 22, 2024 02:19 AM

எண்ணுார்:எண்ணுார், ஆல் இந்தியா ரேடியோ நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 41; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா, இவர்களுக்கு, தர்ஷன், நித்திஷ் ஆகிய இருமகன்கள் உள்ளனர்.
நேற்று மாலை விடுமுறை தினம் என்பதால், கண்ணன் தன் குடும்பத்தினருடன் எண்ணுார், ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில், கடலில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது, ராட்சத அலையில் சிக்கி மாயமாகினார். பதறி போன குடும்பத்தினர், அங்கிருந்த மீனவர்களிடம் சொல்லி தேடியுள்ளனர்.
தொடர்ந்து, எண்ணுார் தீயணைப்பு துறையினரும், நான்கு மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இருள் சூழ்ந்ததால், கடலில் மாயமான கூலி தொழிலாளியை தேடும் பணி நேற்று நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை, மீண்டும் பணி துவங்கும் என தெரிகிறது.

