/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறுவட்ட ஹாக்கி சின்னசேக்காடு பள்ளி அபாரம்
/
குறுவட்ட ஹாக்கி சின்னசேக்காடு பள்ளி அபாரம்
ADDED : ஆக 21, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, மாதவரம் குறுவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள், நேற்று முன்தினம், மணலி - அம்பேத்கர் கால்பந்து விளையாட்டு திடலில் நடைபெற்றது.
பல பள்ளிகள் பங்கேற்றன. இதில், 14 வயது, 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என, நான்கு பிரிவுகளில் சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் அணியினர் முதலிடம் பிடித்தனர்.
இந்த அணியினர் மாவட்ட போட்டியில் விளையாட தகுதி பெற்று உள்ளனர்.

