sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை பாதிப்பு

/

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை பாதிப்பு

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை பாதிப்பு

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை பாதிப்பு


ADDED : ஜூன் 29, 2024 12:23 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி தடத்தில், 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில், ஆரம்பாக்கம் - எளாவூர் இடையே, சென்னையில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் 'ஹவுரா எக்ஸ்பிரஸ்' விரைவு ரயிலில், பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுக்க, நேற்று மாலை 6:28 மணிக்கு ரயில் நின்றது.

இதனால், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலுார்பேட்டை செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து, 6:38 மணிக்கு அபாய சங்கலியை சீரமைத்து ரயில் புறப்பட்ட பின், மற்ற ரயில்கள் புறப்பட்டன.

இதனால், சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய மின்சார ரயில்கள், 15 - 30 நிமிடங்கள் வரை தாமதமாக சென்றன. சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பயணியர் கூட்டம் அலைமோதியது. நெரிசலால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதற்கிடையே மின்சார ரயில்கள், 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு பின், சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us