/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1,299 கோடி வருமானம் ஈட்டி சென்ட்ரல் ரயில் நிலையம் 3வது இடம்
/
ரூ.1,299 கோடி வருமானம் ஈட்டி சென்ட்ரல் ரயில் நிலையம் 3வது இடம்
ரூ.1,299 கோடி வருமானம் ஈட்டி சென்ட்ரல் ரயில் நிலையம் 3வது இடம்
ரூ.1,299 கோடி வருமானம் ஈட்டி சென்ட்ரல் ரயில் நிலையம் 3வது இடம்
ADDED : செப் 13, 2024 12:38 AM
சென்னை,
ரயில்வே வாரியம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதில், ரயில் நிலையங்களில் பயணியர் எண்ணிக்கை மற்றும் வருவாய் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறும். அந்த வகையில், கடந்த நிதியாண்டில், ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை, வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில், 3,337 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி புதுடில்லி ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில், 1,692 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி மேற்கு வங்க ஹவுரா ரயில் நிலையம் உள்ளது. 1,299 கோடி ரூபாய் ஈட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இதேபோல், தமிழகத்தில் உள்ள 541 ரயில் நிலையங்களின் பயணியர் எண்ணிக்கை மற்றும் வருவாய் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்ந்து, எழும்பூர், தாம்பரம், கோவை, மதுரை என, முறையே இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் முக்கிய ரயில் போக்குவரத்து மையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து, புதுடில்லி, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு உட்பட, தினமும் 200க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் மற்றும் புறநகர் ரயில்களை இயக்கும் வகையில், 17 நடைமேடைகள் உள்ளன.
தினமும் 5.30 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். கடந்த நிதியாண்டில் மட்டும் 3.05 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
வரும் ஆண்டுகளில் பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.