/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல குழு தலைவருடன் நேரடியாக வாதத்துக்கு சவால்
/
மண்டல குழு தலைவருடன் நேரடியாக வாதத்துக்கு சவால்
ADDED : மார் 02, 2025 12:50 AM

திருவொற்றியூர், தமிழக முதல்வர் ஸ்டாலின், 72வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள், அறுசுவை உணவு வழங்கும் விழா நேற்று நடந்தது.
பகுதி செயலரும், மண்டல குழு தலைவரான தனியரசு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி, வட சென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி, மாவட்ட செயலர் சுதர்சனம், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:
அ.தி.மு.க., முச்சந்தியில் நிற்கிறது. விரைவில் மிகப்பெரிய விபத்தை சந்திக்கும்.
திருவொற்றியூரை பொறுத்தவரை, மண்டல குழு தலைவர் தனியரசுடன் ஒரே மேடையில் வாதிட, அ.தி.மு.க.,வினர் யாரும் வரலாம்.
வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவர் அதிகம் இரட்டை ஓட்டுரிமை வைத்திருப்பர். ஒவ்வொரு ஓட்டிற்கும் கவனம் தேவை. தேர்தலில் கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.