/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுக்கூடமாக மாறி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை
/
மதுக்கூடமாக மாறி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை
ADDED : செப் 09, 2024 02:44 AM

குன்றத்துார்:சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் கரை குன்றத்தூர் அருகே, நந்தம்பாக்கம் முதல் பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் வரை, 8 கி.மீ., நீளத்திற்கு அமைந்துள்ளது.
இந்த ஏரிகரைகளுக்கு செல்லும் நான்கு வழிகளில், மூன்று இடங்களில் கேட் அமைத்து, பொதுப்பணித் துறையினர் வழிகளை மூடிவிட்டனர்.
சிறுகளத்துார், சரஸ்வதி நகர் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் பழைய கலங்கல் அருகில் உள்ள வழியில் கேட் அமைக்கப்படவில்லை.
இதனால், இந்த வழியே செல்வோர், மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் ஏரிகரையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். மது அருந்திவிட்டு, மதுபாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளர், பாலீதின் கவர்கள் உள்ளிட்டவற்றை வீசி செல்கின்றனர்.
இவை காற்றில் அடித்து செல்லப்பட்டு ஏரி உள்ளே விழுவதால், ஏரி நீர் மாசடைகிறது. எனவே, ஏரி கரையில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.