ADDED : மார் 06, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி ரயில் நிலையத்தில், வரும் மே 13 முதல் 18ம் தேதி வரை மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - ஹவுரா இரவு 7:00 மணி ரயில், வரும் மே 16ம் தேதி ரத்து செய்யப்படுகிறது
ஹவுரா - சென்னை சென்ட்ரல் இரவு 11:45 மணி ரயில், வரும் மே 17ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவல், தெற்கு ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.