/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டப்பந்தயத்தில் சென்னை மாணவர் கிறிஷன் அபாரம்
/
ஓட்டப்பந்தயத்தில் சென்னை மாணவர் கிறிஷன் அபாரம்
ADDED : ஆக 02, 2024 12:39 AM

சென்னை, குரோவ் பள்ளிகள் சார்பில், சி.ஐ.எஸ்.சி.இ., எனும், இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தடகளப் போட்டிகள், சென்னை, நேரு அரங்கில் நடக்கின்றன. இதில், 67 பள்ளிகளைச் சேர்ந்த, 1,300 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், சென்னை செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியைச் சேர்ந்த கிறிஷன், 1:45:50 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடினார்.
கோவை கவுமாரம் சுஷிலா பன்னாட்டு பள்ளி மாணவர் சேது ரமணன் 1:50:57, கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர் மெதுலேஷ் ராம் 1:50:70 நிமிடங்களிலும் கடந்து, இருவரும் அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றினர்.
அதேபோல், 100 மீட்டர் ஓட்டத்தில், மதுரை ஜீவனா பள்ளி மாணவர் கிஷோர், 12:82 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, 12:90 நிமிடத்தில் சென்னை செயின்ட் மைக்கேல்ஸ் பள்ளி மாணவர் ஏதன் ஜீவனும், 12:93 நிமிடங்களில் தஞ்சாவூர் கிறைஸ்ட் பன்னாட்டு பள்ளி மாணவர் முகமது ஆதிப்பும், அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
நீளம் தாண்டுதலில் 5.13 மீட்டர் துாரம் தாண்டிய வேலுார் ஸ்ரீ ெஜயம் பள்ளி மாணவர் சித்திக் சாய்ராம், 4.99 மீட்டர் கடந்த கோத்தகரி செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர் சபரிஷ் பிரணவ் ராஜா, 4.94 மீட்டர் துாரம் தாண்டிய சென்னை செயின்ட் மைக்கேல்ஸ் பள்ளி அகாடமி மாணவர் கிறிஷன், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
உயரம் தாண்டுதலில் 1.46 மீட்டர் துாரத்தை எகிறிக்குதித்த கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர் ஆர்யன், முதலாமிடத்தை பிடித்தார். தொடர்ந்து மூன்று, மூன்று புள்ளிகள் குறைவாக தாண்டிய, சென்னை செயின்ட் மைக்கேல்ஸ் பள்ளி மாணவர் ஏதன் ஜீவனும், குன்னுார் ஹோலி இன்னசன்ட்ஸ் பள்ளி மாணவர் சூர்யாவும் அடுத்தடுத்த இடங்களையும் கைப்பற்றினர்.
ஒட்டுமொத்த விளையாட்டுகளிலும் சென்னை மாணவர்கள் பதக்கங்களை குவித்து அசத்தினர். போட்டிகள் இன்று நிறைவு பெறுகின்றன.