/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையின் தாகம் தீர்க்கும் வீராணம் தினமும் 18 கோடி லிட்டர் வினியோகம்
/
சென்னையின் தாகம் தீர்க்கும் வீராணம் தினமும் 18 கோடி லிட்டர் வினியோகம்
சென்னையின் தாகம் தீர்க்கும் வீராணம் தினமும் 18 கோடி லிட்டர் வினியோகம்
சென்னையின் தாகம் தீர்க்கும் வீராணம் தினமும் 18 கோடி லிட்டர் வினியோகம்
ADDED : ஜூன் 27, 2024 12:19 AM

சென்னை, சென்னை மாநகராட்சியில் தினமும், 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர், ஏரி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வழங்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்களின் ஒன்றாக, கடலுார் மாவட்டம், வீராணம் ஏரி உள்ளது.
இங்கு, நீர் இல்லாத நிலையில், சுற்றுவட்டார பகுதியில் உள்ள இதர நீர் ஆதாரங்களான நெய்வேலி சுரங்கம், பரவனாறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து, தினமும் 7 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மே 26ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து கல்லணை, கீழணை வழியாக, வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது வீராணம் ஏரி, முழு கொள்ளளவான, 1,465 மில்லியன் கன அடியை எட்டி உள்ளது.
இதையடுத்து தற்போது, தினமும் 18 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு வழங்கப்படுகிறது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
வீராணம் ஏரியில் இருந்து சுத்திகரித்த குடிநீர், 228 கி.மீ., பயணித்து, சென்னைக்கு வருகிறது. வீராணத்தில் இருந்து பெரிய குழாய் வழியாக, கேளம்பாக்கத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் வந்து சேர்கிறது.
அங்கிருந்து ஒரு இணைப்பு, ஓ.எம்.ஆர்., பகுதிக்கும், மற்றொரு இணைப்பு போரூர் நீர்த்தேக்க தொட்டிக்கும் செல்கிறது.
போரூரில் இருந்து ஆறு மண்டலங்களில் உள்ள நீரேற்று நிலையங்கள் வழியாக, வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர்வரத்து கூடுதலாக கிடைப்பதால், சென்னையில் பற்றாக்குறை இல்லாமல் வினியோகிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.