/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஐ.டி.,யில் செஸ்: வரும் 24ல் நடக்குது
/
எம்.ஐ.டி.,யில் செஸ்: வரும் 24ல் நடக்குது
ADDED : நவ 09, 2024 12:50 AM
சென்னை, ஜி.எம்., செஸ் அகாடமி மற்றும் எம்.ஐ.டி., இணைந்து, சிறுவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டியை, வரும் 24ம் தேதி நடத்துகின்றன.
குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலையின் எம்.ஐ.டி., வளாகத்தில், 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன.
அனைத்து பிரிவுகளிலும் முதல் 30 இடங்களை பிடிக்கும் மொத்தம் 350 சிறுவர் - சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. எட்டு வயது பிரிவில் பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
போட்டிகள் 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில், சுற்றுக்கு 20 நிமிடங்கள் நடக்கின்றன.
பங்கேற்க விருப்பமுள்ளோர், 22ம் தேதிக்குள் பதிவு செய்துக் கொள்ளலாம். விபரங்களுக்கு, 99415 14097, 88382 29938 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.