/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செஸ் போட்டி: 7 புள்ளிகள் பெற்று தெலுங்கானா வீரர் சாம்பியன்
/
செஸ் போட்டி: 7 புள்ளிகள் பெற்று தெலுங்கானா வீரர் சாம்பியன்
செஸ் போட்டி: 7 புள்ளிகள் பெற்று தெலுங்கானா வீரர் சாம்பியன்
செஸ் போட்டி: 7 புள்ளிகள் பெற்று தெலுங்கானா வீரர் சாம்பியன்
ADDED : ஆக 30, 2024 12:23 AM

சென்னை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் தொடரின் ஐந்தாம் கட்ட போட்டி, போரூரில் நடந்தது.
ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த மாணிக் மிகுலாஸ் மற்றும் துர்க்மெனிஸ்தானின் ஓராஸ்லி, மங்கோலியாவின் யூரிந்துயா உர்ட்சைக் உட்பட 10 பேர் மோதினர்.
நேற்று முன்தினம் நடந்த ஒன்பதாவது சுற்று முடிவில், ஒட்டுமொத்தமாக 7 புள்ளிகள் பெற்ற, தெலுங்கானா வீரர் ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பலா முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தொடர்ந்து, ரஷ்யாவின் அலேசாண்டர் மற்றும் டேவிட் தலா 6 புள்ளிகள் பெற்று, முறையே, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.
தமிழகத்தின் அருண், ஸ்லோவாக்கியாவின் மாணிக் மிகுலாஸ் தலா 5.5 புள்ளிகள், மஹாராஷ்டிராவின் ஜெய்வீரர் 4.5 புள்ளிகள், தமிழகத்தின் ஹர்ஷத் 4 புள்ளிகள், கே.ஆதர்ஷ் 2.5 புள்ளிகள் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவருக்கு, சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத், மாநில சதுரங்க சங்கத்தின் செயலர் ஸ்டீபன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

