/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் ரூ.115 கோடியில் ஆறு புதிய திட்ட பணிகள் துவக்கம்
/
உலக தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் ரூ.115 கோடியில் ஆறு புதிய திட்ட பணிகள் துவக்கம்
உலக தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் ரூ.115 கோடியில் ஆறு புதிய திட்ட பணிகள் துவக்கம்
உலக தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் ரூ.115 கோடியில் ஆறு புதிய திட்ட பணிகள் துவக்கம்
ADDED : ஆக 27, 2024 12:46 AM

வில்லிவாக்கம், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கத்தில், உலக தரத்தில் கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்தக மையம் உட்பட, 111.58 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு புதிய திட்ட பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். அயனாவரத்தில் நவீன சலவைக்கூடம் உட்பட, 5.22 கோடி ரூபாயில் நிறைவுபெற்ற பணிகளையும் திறந்து வைத்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில், 3.93 ஏக்கர் பரப்பளவில், உலக தரத்தில் கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்த மையம் அமைய உள்ளது.
அங்கு, 1 லட்சத்து 25 ஆயிரத்து 402 சதுர அடியில், தரை தளத்தில் 64 கடைகள், அலுவலகம் மற்றும் வாகன நிறுத்தம் அமைகிறது. முதல் தளத்தில் 70 கடைகள், இரண்டாம் தளத்தில் உணவு விடுதி உட்பட, 54 கடைகள், மீன்வள அமைப்புகள் என, மொத்தம் 188 கடைகள் அமைக்கப்படுகின்றன.
இதற்காக, 53.50 கோடி ரூபாய் மதிப்பில் துவங்க உள்ள பணிகளுக்கு, மையம் அமைய உள்ள வில்லிவாக்கத்திலேயே, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
அதே இடத்தில், ராயபுரம் மூலகொத்தளத்தில், 0.67 ஏக்கர் பரப்பளவில், 14.31 கோடி ரூபாயில் சமுதாய நலக்கூடம்; புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில், 1.04 ஏக்கரில், 11.43 கோடி மதிப்பில் நவீன சலவைக்கூடத்திற்கான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தவிர புழல், ரெட்டேரி மற்றும் கொளத்துார் ஏரிக்கரைகளை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் என, மொத்தம் 115.58 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு புதிய திட்ட பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அதேபோல் கொளத்துார், நேர்மை நகரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி கமிஷனர் அலுவலகம், கொளத்துார், ஜி.கே.எம்.காலனி.
மேலும், ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம், சி.கே.சாலையில், 2.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன சலவைக்கூடம் மற்றும் 45 லட்சம் ரூபாய் செலவில் 3 ரேஷன் கடைகள் என, மொத்தம் 5.22 கோடி செலவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தத்தளித்த வில்லிவாக்கம்
ஐ.சி.எப்., - வில்லிவாக்கம் செல்லும் நியூ ஆவடி சாலையில், ஏற்கனவே சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று, முதல்வரை வரவேற்க நியூ ஆவடி சாலை, நாதமுனி துவங்கி பாடி மேம்பாலம் வரை, கலை நிகழ்ச்சிகளுக்காக மேடைகள் அமைக்கப்பட்டன. அங்கு கட்சியினரும் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.