/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தை கடத்தல் பீதி வடமாநில நபருக்கு அடி, உதை
/
குழந்தை கடத்தல் பீதி வடமாநில நபருக்கு அடி, உதை
ADDED : மே 16, 2024 12:42 AM
கொடுங்கையூர், கொடுங்கையூர், சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் ரபீக் அகமது, 40; ஆட்டோ ஓட்டுனர். இவரது மாமியார் ஜும்மா பீவி, தன் பேரக்குழந்தைகளான முகமது ரெய்கான், 8, மூன்றரை வயது குழந்தை முகமது ரிஸ்வான் ஆகியோரை அழைத்து கொண்டு, ரபீக் அகமது வீட்டிற்கு நடந்து வந்தார்.
அப்போது, ஜும்மா பீவியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், குழந்தைகளை பிடிக்க வந்துள்ளார். பின், ஜும்மா பீவியிடம் குழந்தைகளை தரக்கோரி மிரட்டினார். இதனால் பயந்து போன ஜும்மா பீவி கத்தவே, அக்கம்பக்கத்தினர் மர்ம நபருக்கு தர்ம அடி கொடுத்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வடமாநிலத்தைச் சேர்ந்த லால்மிண்டால் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. பின், போலீசார் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று ஒப்படைத்தனர்.