/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பற்ற மாநகராட்சி பூங்கா ஏமாற்றத்துடன் திரும்பும் சிறுவர்கள் பராமரிப்பற்ற போகன் வில்லா பூங்கா விளையாட முடியாமல் சிறுவர்கள் தவிப்பு

ADDED : ஜூலை 02, 2024 01:15 AM

அண்ணா நகர், போதிய மின் விளக்குகள் இல்லாததால், போகன்வில்லா பூங்காவில் விளையாட முடியாமல், சிறுவர்கள் தவிக்கின்றனர்.
சென்னை, அண்ணா நகர் மண்டலத்தில், கிழக்கு அண்ணா நகர் ஆறாவது அவென்யூவில், குடியிருப்புகளுக்கு மத்தியில் பல ஏக்கர் பரப்பில், போகன்வில்லா எனும் பெயர் கொண்ட, பழமையான பூங்கா உள்ளது.
பூங்காவை சுற்றியுள்ள, நான்கு முதல் 25வது தெருக்கள் வரை மற்றும் இரண்டாவது பிரதான சாலை, ஆறாவது அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.
அண்ணா நகர் 'டவர்' கோபுரம், திரு.வி.க., பூங்காவைப் போல், போகன்வில்லா பூங்காவும் இப்பகுதியில் பிரபலம்.
இங்கு தினமும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
பூங்காவில் ஸ்கேட்டிங், நடைபயிற்சி, சிறுவர்கள் விளையாட்டுத்திடல்கள் உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூங்காவில், போதிய பராமரிப்பு இல்லை. குறிப்பாக, பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பகுதியிலுள்ள மின் விளக்குகள், பல மாதங்களாக எரியவில்லை.
இதனால், குழந்தைகள் விளையாட அச்சப்படுகின்றனர். இருளில் விளையாடும் சில சிறுவர்களும், தவறி விழுந்து காயமடைகின்றனர்.
அதேபோல், பூங்காவில் சில இடங்களில், சிறிய மழைக்கே குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. குறிப்பாக, சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்களின் அருகில், மழைநீர் கழிவுநீர் போல் தேங்குகிறது.
இதனால், மழைக்காலங்களில் சிறுவர்கள் விளையாட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.
சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்களில், அத்துமீறி பெரியவர்களும் விளையாடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதையெல்லாம் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.