/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் ஓட்டுனரை தாக்கி பணம் பறிப்பு: சிங்கார சென்னையில் போதையால் சீரழியும் சிறார்கள்
/
கார் ஓட்டுனரை தாக்கி பணம் பறிப்பு: சிங்கார சென்னையில் போதையால் சீரழியும் சிறார்கள்
கார் ஓட்டுனரை தாக்கி பணம் பறிப்பு: சிங்கார சென்னையில் போதையால் சீரழியும் சிறார்கள்
கார் ஓட்டுனரை தாக்கி பணம் பறிப்பு: சிங்கார சென்னையில் போதையால் சீரழியும் சிறார்கள்
UPDATED : ஏப் 27, 2024 07:16 AM
ADDED : ஏப் 27, 2024 12:26 AM

தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ஹரன்சந்த் ஸ்ரீதர், 23. இவர், 'ஊபர்' தனியார் வாடகை கார் நிறுவனத்தில், ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
இவரது, மாருதி வேகனார் காரில் கடந்த 24ம் தேதி அதிகாலை 3:00 மணி அளவில், கொடுங்கையூரில் இருந்து, நான்கு சிறுவர்கள் சவாரி ஏறியுள்ளனர். அவர்கள் செல்ல வேண்டிய மாதரவத்திற்கு, ஓட்டுனர் ஹரன்சந்த் ஸ்ரீதர் காரை இயக்கியுள்ளார்.
கார், மாதவரம் தபால் பெட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, காரின் பின்னால் இருந்த ஒருவன், திடீரென கார் ஓட்டுனரின் தலை மற்றும் தோளில் கத்தியால் பலமாக தாக்கினான்.
இதையடுத்து, நான்கு பேரும் சேர்ந்து ஓட்டுனரை மிரட்டி, 1,800 ரூபாய் பறித்தனர். மேலும், ஓட்டுனரின் மொபைல் போனில் 'சிம்' கார்டையும் பறித்தனர். அதன் பின், மாதவரம் பால்பண்ணை மைதானம் அருகே, அந்த நால்வரும் கீழே இறங்கி தப்பினர்.
இது குறித்து, மாதவரம் போலீசார் விசாரித்தனர். இதில் கஞ்சா போதையில் வாலிபர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதில், மாதவரம், ரவி கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெரின் ஜோசப், 18, வின்சென் ஜோ, 18, கொடுங்கையூரை சேர்ந்த, 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, ஏழு மொபைல் போன்கள், 'ேஹாண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட நால்வரும், கொடுங்கையூரில் குற்ற வழக்கில் சிக்கி கொடுங்கையூர் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
வீட்டை சூறையாடிய வாலிபர்
திருவேற்காடு, அர்ஜுனா மேடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 25. இவர், கடந்த மாதம் திருவேற்காடில், கஞ்சா விற்ற வழக்கில் சிக்கி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், நேற்று முன்தினம் விடுதலையானார்.
வீட்டிற்கு வந்த அருண்குமார், சிறையில் இருந்து தன்னை உடனடியாக ஜாமினில் எடுக்காமல் இருந்த பெற்றோருடன், நேற்று காலை தகராறு செய்தார். அதை தொடர்ந்து, வீட்டில் இருந்த 'டிவி' பீரோ என, அனைத்து பொருட்களையும் துாக்கி வெளியே வீசி சேதப்படுத்தினார். மேலும், வீட்டின், ஜன்னல், கதவு ஆகியவற்றையும் சூறையாடினார். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
12 பேரை வெ ட்டிய 3 இளைஞர்கள்
திருமுல்லைவாயில், கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் அபினேஷ், 25, விஷ்ணு, 23, மற்றும் முத்து, 25. அனைவரும், 'ஏசி' மெக்கானிக்.
அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில், தினமும் கஞ்சா போதையில் அநாகரிகமாக பேசி மற்றவர்களுக்கு இடையூறு செய்தனர். பெண்களையும் ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி, 38, என்பவர், நேற்று முன்தினம் இரவு அவர்களை கண்டித்தார். கஞ்சா போதையில் இருந்த மூவரும், சீதாலட்சுமியிடம் தகராறு செய்து, தங்களிடம் இருந்த கத்தியால், அவரையும், அவரது மகன் கமலேஷையும் வெட்டினர். தடுக்க வந்த சந்திரலேகா, 40, அவரது மகன் விஜய், 20, ஆகியோரையும் வெட்டினர். மேலும், சாலையில் சென்ற கணேஷ், 18, சண்முகம், 39, உட்பட, 12 பேரை வெட்டி, அராஜகத்தில் ஈடுபட்டனர்.
விரைந்து வந்த போலீசார், அபினேஷ், விஷ்ணு ஆகியோரை மடக்கி பிடித்தனர். முத்து தப்பினார். விசாரணையில், இந்த மூவர் கும்பல், திருமுல்லைவாயில் சுற்றுவட்டாரங்களில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்று வந்தது தெரியவந்தது.
போதை மாத்திரை விற்ற சிறுவன்
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து போதை மாத்திரைகளை, சென்ட்ரல் ரயிலில் கடத்தி வருவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சிறுவன் ஒருவன் தன் 'டிராவல் பேக்கை' மறைத்தப்படி எடுத்து சென்றார். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், கட்டுக்கட்டாக மாத்திரைகள் சிக்கின. விசாரணையில், அம்பத்துார் எஸ்டேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
ஹைதராபாதில் இருந்து 30,000த்திற்கு மாத்திரை வாங்கி வந்து, 2 லட்சம் ரூபாய் வரை விற்றது தெரியவந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து, 6,890 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் குழு -

