ADDED : ஜூலை 02, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூக்கடை, குன்றத்துாரைச் சேர்ந்தவர் 20 வயது சினிமா துணை நடிகை. இவர், நேற்று பூக்கடை பகுதியில் பொருட்கள் வாங்கி விட்டு, வீட்டிற்கு செல்ல, பூக்கடை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது, மதுபோதையில் வந்த வடமாநில வாலிபர், அவரிடம் தகாத வார்த்தையால் பேசி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
தகவலறிந்த எஸ்பிளனேடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, சம்பவத்தில் ஈடுபட்ட போதை வாலிபரான யோகேந்திரா, 30, என்பவரை கைது செய்தனர்.