/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரியபாளையத்தில் தொடரும் நெரிசல் மணிக்கணக்கில் காத்திருக்கும் சிப்காட் லாரிகள்
/
பெரியபாளையத்தில் தொடரும் நெரிசல் மணிக்கணக்கில் காத்திருக்கும் சிப்காட் லாரிகள்
பெரியபாளையத்தில் தொடரும் நெரிசல் மணிக்கணக்கில் காத்திருக்கும் சிப்காட் லாரிகள்
பெரியபாளையத்தில் தொடரும் நெரிசல் மணிக்கணக்கில் காத்திருக்கும் சிப்காட் லாரிகள்
ADDED : ஆக 19, 2024 02:33 AM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடக்கும்.
இதில் பங்கேற்க, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று, அம்மனை தரிசனம் செய்வர்.
ஆடி மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமை முடிந்த நிலையில், நேற்று, ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
வேன், கார், பேருந்து, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்ததால், வழக்கம் போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வேனை, போலீசார் பாதை ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அதேபோல், சிப்காட் தொழிற்பேட்டைக்கு சரக்கு ஏற்றி வந்த லாரிகள், பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலை சூளைமேனியில் இருந்து, தேர்வாய் வரை, நெரிசலில் மணிக்கணக்கில் நின்றன. இதனால் தேர்வாய் சிப்காட் பகுதியில் உற்பத்தி பெருமளவு பாதித்தது.
'சிப்காட்' வளாகத்தில் தொழிற்சாலைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த தமிழக அரசு, அங்கிருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்ளாமல் உள்ளது.
இதனால், தொழிற்சாலைகளில் குறித்த நேரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கிடப்பில் போடப்பட்ட பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என, உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.