/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிவில் சர்வீஸ் வாலிபால் 58 மாநில அணிகள் பலப்பரீட்சை
/
சிவில் சர்வீஸ் வாலிபால் 58 மாநில அணிகள் பலப்பரீட்சை
சிவில் சர்வீஸ் வாலிபால் 58 மாநில அணிகள் பலப்பரீட்சை
சிவில் சர்வீஸ் வாலிபால் 58 மாநில அணிகள் பலப்பரீட்சை
ADDED : பிப் 15, 2025 12:30 AM

சென்னை,சென்னையில் துவங்கிய, அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டியில், 58 அணிகள் பங்கேற்றுள்ளன.
மத்திய சிவில் சர்வீஸ் கலாசார மற்றும் விளையாட்டு வாரியம் சார்பில், அகில இந்திய சிவில் வாலிபால் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று துவங்கின.
இதில், கொச்சின், தமிழகம், குஜராத், மும்பை உட்பட நாடு முழுதும் இருந்து, ஆண்களில் 36 அணிகள், பெண்களில் 22 அணிகள் என, மொத்தம் 58 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியிலும், அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர். 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை துவங்கிய முதல் போட்டியை, மத்திய சிவில் சர்வீஸ் கலாசார மற்றும் விளையாட்டு வாரிய தலைவர் ஜெய்சங்கர், தமிழ்நாடு வாலிபால் சங்க வாழ்நாள் தலைவர் அர்ஜூன்துறை, செயலர் ஸ்ரீகேசவன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
ஆண்களுக்கான முதல் போட்டியில் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை அணி, 2 - 0 என்ற கணக்கில் கோல்கட்டாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
மற்ற போட்டிகளில், கேரளா அணி, 2 - 0 என்ற கணக்கில் தெலுங்கானாவையும், புதுச்சேரி, 2 - 0 என்ற கணக்கில் கர்நாடகாவையும் தோற்கடித்தன. போட்டிகள் தொடர்ந்து, 18ம் தேதி வரை நடக்கின்றன.