/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்துகள் வர தாமதமானதால் கிளாம்பாக்கம் பயணியர் அவதி
/
பேருந்துகள் வர தாமதமானதால் கிளாம்பாக்கம் பயணியர் அவதி
பேருந்துகள் வர தாமதமானதால் கிளாம்பாக்கம் பயணியர் அவதி
பேருந்துகள் வர தாமதமானதால் கிளாம்பாக்கம் பயணியர் அவதி
ADDED : செப் 08, 2024 12:23 AM

கூடுவாஞ்சேரி,
விநாயகர் சதுர்த்தி விழாவை தங்களது சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, தென் மாவட்ட மக்கள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு குவிந்தனர். விடிய, விடிய வந்த பயணியரின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
எனினும், சிறப்பு பேருந்துகள் வர தாமதமானதால், அதிகாரிகளுடன் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தனர்.
இதையடுத்து, மாற்று பேருந்துகள் வரவழைக்கப்பட்டதும், பயணியர் ஏறி சென்றனர்.
அதேபோல், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணியருக்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களில் இருந்து 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனைய முதன்மை அதிகாரி பார்த்திபன் கூறியதாவது:
வார விடுமுறை நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு பயணியர் அதிகளவில் குவிந்தனர்.
இயக்கப்பட்ட 2,563 பேருந்துகளில், நேற்று முன்தினம் மட்டும் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயணித்துள்ளனர்.
சிறப்பு பேருந்துகளும், தேவையான அளவு இயக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.