sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம் முடக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

/

சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம் முடக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம் முடக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க திட்டம் முடக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு


ADDED : மே 01, 2024 12:30 AM

Google News

ADDED : மே 01, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் எல்லையை விரிவாக்கம் செய்யும் திட்டம் பாதியில் முடங்கியது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நகர், ஊரமைப்பு சட்டப்படி உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தற்போதைய மொத்த பரப்பளவு, 1,189 சதுர கி.மீ.,யாக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி பிரதானமாக இருந்தாலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளும் அடங்கியுள்ளன.

சென்னை பெருநகருக்கு வெளியில் ஏற்பட்டு வரும் நகர்ப்புற வளர்ச்சியின் தாக்கத்தை முறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இதையடுத்து, சி.எம்.டி.ஏ., எல்லையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான உத்தரவுகள், 2018 ல் பிறப்பிக்கப்பட்டன. இதன்படி, 1,189 சதுர கி.மீ.,யாக உள்ள சி.எம்.டி.ஏ., பரப்பளவை, 8,878 சதுர கி.மீ.,யாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், குறிப்பிட்ட சில பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், விரிவாக்க பகுதியின் பரப்பளவு, 5,800 சதுர கி.மீ.,யாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இதில் சேர்க்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்புதல் தீர்மானம் பெறும் நடவடிக்கைகள், 2023ல் துவங்கின. இதன் தொடர் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

கடந்த, 2018 ல் துவங்கிய சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க பணிகள், முடிவுக்கு வரவில்லை. தற்போதைய நிலவரம் குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.

பரப்பளவு குறைப்புக்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், கட்டுமான திட்ட அனுமதி அதிகாரத்தை டி.டி.சி.பி.,யிடம் இருந்து பெற சி.எம்.டி.ஏ., முயற்சித்தது. இதில் அதிகாரிகள் நிலையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

அதே நேரம், சி.எம்.டி.ஏ.,வுக்கு மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்தும் பணிகளும் முடங்கியுள்ளன. டில்லியில் இருப்பது போன்று தனி அமைப்பை ஏற்படுத்தினால், இது விஷயத்தில், அதிகாரிகளிடம் கருத்து ஒற்றுமை ஏற்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us