/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1,336 வீடுகள் மறு கட்டுமானம் ரூ.215 கோடி தரும் சி.எம்.டி.ஏ.,
/
1,336 வீடுகள் மறு கட்டுமானம் ரூ.215 கோடி தரும் சி.எம்.டி.ஏ.,
1,336 வீடுகள் மறு கட்டுமானம் ரூ.215 கோடி தரும் சி.எம்.டி.ஏ.,
1,336 வீடுகள் மறு கட்டுமானம் ரூ.215 கோடி தரும் சி.எம்.டி.ஏ.,
ADDED : மார் 11, 2025 01:20 AM
சென்னை,
சிதிலமடைந்த நிலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், 1,336 அடுக்குமாடி குடியிருப்புகள், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளன.
சென்னையில் பல்வேறு நிலைகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், வடசென்னையில் போதிய அளவில் மேம்படவில்லை என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வாக, சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியில், 1,000 கோடி ரூபாயில், வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது.
இதற்காக, துறை வாரியாக தேவைப்படும் திட்டங்களின் பட்டியல் இறுதி செய்யும்போது, திட்டத்தின் மொத்த மதிப்பு, 6,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டன.
வாட்டர் பேசின் சாலை, ஸ்டான்லி சாலை ஆகிய இடங்களில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டன. இத்திட்டங்களை, சி.எம்.டி.ஏ., நேரடியாக மேற்கொள்கிறது.
இதையடுத்து, வடசென்னையில் கொடுங்கையூர், கிழக்கு கல்லறை சாலை, கோதண்டராமர் தெரு ஆகிய இடங்களில், சிதிலமடைந்த, 1,336 அடுக்குமாடி குடியிருப்புகள், 215 கோடி ரூபாயில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளன.
இந்த பணிகள், 2024 - 25ம் நிதி ஆண்டில் துவங்கி, அடுத்த நிதியாண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. இதற்கான நிதியை, சி.எம்.டி.ஏ.,விடம் இருந்து பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.