/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேதியியல் தொழில்நுட்ப பயிலகம் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
வேதியியல் தொழில்நுட்ப பயிலகம் மாணவர் சேர்க்கை துவக்கம்
வேதியியல் தொழில்நுட்ப பயிலகம் மாணவர் சேர்க்கை துவக்கம்
வேதியியல் தொழில்நுட்ப பயிலகம் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : மே 14, 2024 12:33 AM
சென்னை, :வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில், பட்டயப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க, வரும் 24ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தரமணியில் உள்ள வேதியியல் தொழில்நுட்ப பயிலகம், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை துவக்கி உள்ளது. இங்கு கெமிக்கல் இன்ஜினியரிங், பாலிமர் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில், பட்டயப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள், https://www.tnpoly.in என்ற இணையதளம் வழியே, வரும் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பதிவுக் கட்டணம் 150 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் விபரங்களுக்கு பொறுப்பு முதல்வர் ஜானகியை, 98418 24107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.