/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை கருத்தரங்கம்
/
பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை கருத்தரங்கம்
பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை கருத்தரங்கம்
பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை கருத்தரங்கம்
ADDED : ஆக 30, 2024 12:28 AM

சென்னை, அப்பல்லோ மருத்துவ குழுமம் சார்பில், பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் மேம்பட்ட சிகிச்சை முறைகள் குறித்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்று துவங்கியது.
அப்பல்லோ மருத்துவ குழும செயல் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி பேசியதாவது:
சர்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு, உலகின் தலைசிறந்த நிபுணர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
வளரும் சிந்தனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கருத்தரங்கில் பங்கேற்பது இலவசமாக்கப்பட்டு உள்ளது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் பயிற்சி உதவும்.
இவ்வாறு பேசினார்.