/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆர்., நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணி துவக்கம்
/
ஓ.எம்.ஆர்., நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணி துவக்கம்
ஓ.எம்.ஆர்., நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணி துவக்கம்
ஓ.எம்.ஆர்., நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : செப் 02, 2024 01:55 AM

சோழிங்கநல்லுார்:மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை உள்ள, 200 அடி அகல ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை 21 கி.மீ., துாரம் உடையது.
சாலையின் இருபுறத்திலும் 20 அடி அகலத்தில் அணுகு சாலை உள்ளது. இதில், 4 அடி அகலம், 4 அடி ஆழத்தில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு உள்ளது.
அடைப்பு அகற்றும் வகையில், 15 மீட்டர் இடைவெளியில், 1,000 இடங்களில் சேம்பர் அமைக்கப்பட்டு உள்ளது.
இதோடு, சாலையின் குறுக்கே 23 இடங்களில், 8 அடி அகலம், 5 அடி ஆழத்தில் நீர்வழித்தடம் செல்கிறது.
சாலையில் இருந்து வடியும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாய் மற்றும் சதுப்பு நிலத்தில் சேரும் வகையில், இந்த நீர்வழித்தடங்கள் உள்ளன.
தற்போது, ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இப்பணிக்காக பள்ளம் தோண்டியதால், வடிகால் மற்றும் சாலையின் குறுக்கே உள்ள நீர்வழித்தடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மெட்ரோ ரயில் பணியின்போது வெளியேற்றப்படும் திரவ கழிவுகள், வடிகாலில் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், லேசான மழைக்கே தண்ணீர் செல்ல வழியின்றி, ஓ.எம்.ஆரில் வெள்ளம் தேங்கி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தவிர, கனமழை பெய்தால் நீரோட்டம் முற்றிலும் தடைப்பட்டு, குடியிருப்புகளில் வெள்ளம் சூழும் அபாயமும் நிலவுகிறது.
இப்பாதிப்பை தவிர்க்க 21 கி.மீ., துாரத்தில் சாலையின் இருபுறமும் வடிகால் மற்றும் குறுக்கே அமைத்துள்ள நீர்வழித்தடங்களில் துார்வார, சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணியை, நேற்று முன்தினம் துவக்கியுள்ளது.
அணுகு சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால், பல சேம்பர்கள் சேதமடைந்து உள்வாங்கி உள்ளன. அதை, மெட்ரோ ரயில் நிர்வாகம் சீரமைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கு முன், நீர்வழித்தடங்களில் தண்ணீர் சீராக செல்ல, தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.