/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலியை தாக்கிய காதலன் மீது புகார்
/
காதலியை தாக்கிய காதலன் மீது புகார்
ADDED : மே 03, 2024 11:59 PM
அண்ணா நகர், பேச மறுத்த காதலியை தாக்கிய காதலன் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 32. இவர், அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், கார்த்திகேயனின் நடவடிக்கை சரியில்லாததால், அப்பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதையடுத்து பலமுறை, தன்னிடம் பேசுமாறு கார்த்திகேயன் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகருக்கு வந்த கார்த்திகேயன், பெண்ணை வற்புறுத்தி காரில் ஏற்றிச் சென்றதாக தெரிகிறது.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த கார்த்திகேயன், காதலியை காருக்குள் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அவரிடமிருந்து தப்பி வந்த அந்த பெண், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, கார்த்திகேயனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.