/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கணக்கெடுப்பு தாமதம் கணக்கீட்டாளர்கள் மீது புகார்
/
மின் கணக்கெடுப்பு தாமதம் கணக்கீட்டாளர்கள் மீது புகார்
மின் கணக்கெடுப்பு தாமதம் கணக்கீட்டாளர்கள் மீது புகார்
மின் கணக்கெடுப்பு தாமதம் கணக்கீட்டாளர்கள் மீது புகார்
ADDED : ஏப் 24, 2024 12:51 AM
சென்னை, தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. மின் ஊழியர்கள், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்க வேண்டும். கடும் வெயில், ஐ.பி.எல்., கிரிக்கெட் உள்ளிட்ட காரணங்களால் வீடுகளில், 'ஏசி' சாதனம், 'டிவி' உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல பகுதிகளில் குறித்த காலத்தில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்கவில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
வீடுகளுக்கு வந்து, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை ஊழியர்கள் கணக்கு எடுப்பதில்லை. அவர்கள் நேரில் வராமல், உத்தேசமாக கணக்கு எடுக்கின்றனர்.
ஏப்ரல் முதல் வாரத்தில் கணக்கு எடுக்க வேண்டிய பல வீடுகளில் இன்னும் வரவில்லை. தாமதமாக கணக்கெடுக்கும் போது, குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும் கூட, அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.
சிலர், கணக்கெடுக்காத விபரம் தெரியாமல், 'கட்டணம் வரவில்லை' என்று நினைக்கின்றனர்.
ஆனால் திடீரென வந்து, நான்கு, ஆறு மாதங்களுக்கான மின் கட்டணத்தை மொத்தமாக செலுத்துமாறு கூறுகின்றனர். இதனால் கடும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, குறித்த காலத்தில் கணக்கு எடுப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
*

