/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி :கலவை கொட்டியும் அலங்கோலமான சாலை
/
புகார் பெட்டி :கலவை கொட்டியும் அலங்கோலமான சாலை
ADDED : செப் 10, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலவை கொட்டியும் அலங்கோலமான சாலை
வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு போரூரில், செட்டியார் அகரம் பிரதான சாலை உள்ளது. இது, போரூர் மற்றும் துண்டலம் பகுதியை இணைக்கும் சாலையாக உள்ளது. இச்சாலையில் குடிநீர் வாரியம் சார்பில், குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்றன.
பணிகள் முடிந்த பின், சாலையில் உள்ள பள்ளத்தை சிமென்ட் கலவை கொட்டி சீர் செய்தனர். அந்த சிமென்ட் கலவையில் வாகனங்கள் சென்றதால், அதில் வாகன டயர் அடையாளம் பதிந்து, அறுவடை முடிந்த வயல் போல் மாறி உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அருண், 30, வளசரவாக்கம்.