
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி மற்றும் பூந்தமல்லி பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, போரூர்,- மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில் தற்போது, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், போரூர் ஏரி அருகே பேருந்து நிழற்குடை உள்ளது.
ஆனால், கூரை இல்லை. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், மழையில் நனையும் நிலை உள்ளது. எனவே, பேருந்து நிழற்குடைக்கு கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விஜயகுமார்,
போரூர்.