/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.200 கொடுத்து டிக்கெட் பயணிக்கு நடத்துனர் 'பளார்'
/
ரூ.200 கொடுத்து டிக்கெட் பயணிக்கு நடத்துனர் 'பளார்'
ரூ.200 கொடுத்து டிக்கெட் பயணிக்கு நடத்துனர் 'பளார்'
ரூ.200 கொடுத்து டிக்கெட் பயணிக்கு நடத்துனர் 'பளார்'
ADDED : ஆக 08, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஊரப்பாக்கத்தில் தங்கி, சென்னையில் பணிபுரிகிறார். நேற்று காலை, செங்கல்பட்டு செல்லும் மாநகர பேருந்தில் தாம்பரத்தில் ஏறினார். 200 ரூபாய் கொடுத்து ஊரப்பாக்கத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார்.
அதற்கு நடத்துனர், சில்லரை இல்லை எனக்கூறி, டிக்கெட் தர மறுத்துள்ளார். அந்த வாலிபர், தன்னிடம் வேறு பணம் இல்லை என மீண்டும் கூறினார். இதில் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடத்துனர், ஆபாசமாக பேசி வாலிபரை கன்னத்தில் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.