/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்திப்பாரா சுரங்கப்பாதையில் சிக்கிய லாரியால் நெரிசல்
/
கத்திப்பாரா சுரங்கப்பாதையில் சிக்கிய லாரியால் நெரிசல்
கத்திப்பாரா சுரங்கப்பாதையில் சிக்கிய லாரியால் நெரிசல்
கத்திப்பாரா சுரங்கப்பாதையில் சிக்கிய லாரியால் நெரிசல்
ADDED : ஆக 31, 2024 12:07 AM

ஆலந்துார், கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக வடபழனி, பூந்தமல்லி செல்ல சுரங்கப்பாதை உள்ளது. பைக், கார், மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல இயலும். கனரக வாகனங்கள் செல்ல தடையுள்ளது.
நேற்று முன்தினம் இரவும், கிண்டியில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல் நோக்கி சென்ற கான்கிரீட் கலவை லாரி, சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டது. இதனால், வாகனங்கள் அனைத்தும், அடுத்தடுத்து வரிசை கட்டி நின்றன.
பரங்கிமலை போலீசார் வாகன டயரின் காற்றை இறக்கி, இழுவை இயந்திரம் வாயிலாக லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்ந்து ஏற்படும் இப்பிரச்னைக்கு தீர்வாக, சுரங்கப்பாதையில் இரு புறத்திலும் கனரக வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்.