ADDED : மே 03, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், திருமங்கலம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், அரசு ஊழியருக்கான வாடகை குடியிருப்பு உள்ளது. இங்கு பல்வேறு பிளாக்குகளில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
குடியிருப்பில் இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக முறையாக தண்ணீர் வினியோகிக்கப்படாததால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு, திருமங்கலத்தில் இருந்து அம்பத்துார் செல்லும் சாலையில், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார், அவரிடம் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால், சில மணி நேரம் திருமங்கலம்- அம்பத்துார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.