தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முன்னெச்சரிக்யைாக காங்., நிர்வாகி கைது

முன்னெச்சரிக்யைாக காங்., நிர்வாகி கைது

முன்னெச்சரிக்யைாக காங்., நிர்வாகி கைது


ADDED : ஏப் 10, 2024 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, பிரதமர் மோடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வரும் போதெல்லாம், எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்., நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் நேற்று மாலை பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடந்தது. அவரது வருகைக்கு முன், காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில், அவர்களை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.

தமிழக காங்., - எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், சென்னை கிண்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். அவரை விடுதியிலேயே போலீசார் முன்னெச்சரிக்கை காவலில் வைத்திருந்தனர். பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நிகழ்ச்சி முடிந்ததும், அவரை விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us