/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுமான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
/
கட்டுமான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
ADDED : ஆக 22, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துாரைச் சேர்ந்தவர் பிரேம். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
குன்றத்துார் அடுத்த நத்தம் பகுதியில், புதிதாக வீட்டுமனைகள் பிரித்து, அங்கு வீடுகள் கட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம், இவரது வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில், மர்ம நபர்கள் சுற்றுச்சுவரை உடைத்து, கட்டுமான பொருட்கள் வைத்திருந்த குடிசைக்கு தீ வைத்துள்ளனர்.
இந்த விபத்தில், மரச்சாமான்கள், கட்டுமான பொருட்கள் எரிந்து நாசமாகின.